உடுமலை பொள்ளாச்சி சாலையில் கேரளா அரசு பேருந்தை விரட்டிய படையப்ப யானை
மூணார்
மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் வயது முதிர்ந்த படையப்பா ஆண் காட்டு யானை மிகவும் பிரபலமாகும்.
இந்த நிலையில் உடுமலை மூணார் சாலையில் எட்டாம் மைல்கல் அருகே இரவு 10 மணி அளவில் கேரளா அரசு பேருந்து வழிமறித்தது சுதாரித்துக் கொண்ட ஓட்டுனர் பேருந்து லாபகமாய் இயக்கினார் ஆனால் படைப்பு யானை அரசு பேருந்தில் பின்னால் ஓடியது இதனால் பயணிகள் கூச்சலிட்டதால் மெதுவாக வன பகுதிக்குள் சென்று மறைந்தது இந்த காட்சி மற்றொரு முனையில் பேருந்தில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்கள் பதிவிட்டுள்ளார் தற்போது வைரலாகி வருகிறது
மேலும் வனத்துறை தெரிவிக்கையில்:
கோடை காலம் துவங்கி உள்ளதால் யானைகள் நீர்நிலை நோக்கி நகர துவங்கியுள்ளது இதனால் வனச்சாலையில் கடக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஏற்படுகிறது எனவே யானைகளை பார்த்தவுடன் சாலையை கடக்க உதவ வேண்டும் மற்றும் யானையை புகைப்படம் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றனர்
நமது செய்தியாளர் :மூணார் ராஜா