Followers

சாலக்குடி அருகே நெற்றியில் காயத்துடன் சுற்றுத் திரியும் காட்டு யானையை மேல் சிகிச்சைக்காக கோடநாடு யானைகள் பயிற்சி மையத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர் சாலக்குடி வனத்துறையினர்

 சாலக்குடி அருகே நெற்றியில் காயத்துடன் சுற்றுத் திரியும் காட்டு யானையை மேல் சிகிச்சைக்காக கோடநாடு யானைகள் பயிற்சி மையத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர் சாலக்குடி வனத்துறையினர் 




வால்பாறை அருகே உள்ள சாலக்குடி, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் சாலைகளில் கடந்த 3 மாதமாக வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று நெற்றியில் காயத்துடன் சுற்றித்திரிந்ததை பார்த்த வனத்துறை ஊழியர்கள் உடனடியாக DFO லட்சுமி அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற DFO யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்து கடந்த ஜனவரி24 தேதி வெற்றிலை பாறை என்னை பண்ணை தோட்டத்திற்கு வனத்துறையின் தலைமையில் கால்நடை மருத்துவர் டாக்டர் அருண் ஜக்காரியா தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் காயமடைந் யானைக்கு இரண்டு மணி நேரம் சிகிச்சை அளித்த பின் வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர் தொடர்ந்து யானையை தொடர்ந்து 24 நேரமும் கண்காணித்து வந்தனர் ஜனவரி 29 நலமுடன் இருப்பதாகவும் மற்ற யானையுடன் சேர்ந்து இருப்பதாகவும் திருச்சூர் வனத்துறையினர் தெரிவித்திருந்தனர் இந்நிலையில் யானை ஆனது காயத்தின் மேல் நீரை பீச்சி அடிப்பதாலும் மற்றும் மணலை அள்ளிப் போடுவதால் காயம் பெரிதாக உள்ளது இதனால் யானையை பிடித்து எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொடநாடு யானைகள் பயிற்சி மையத்தில் கூண்டில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர் 



முதல் கட்டமாக புதிய யானைக்கான கரோல் அமைக்கும் பணி துவங்க உள்ளதால் மூணாறில் இருந்து யூகாலிப்டீச் மரங்கள் வெட்டும் பணி தொடங்க உள்ளது மேலும் கரோல் தயாரானவுடன் காயத்துடன் சுற்றித் திரியும் காட்டு யானையை கும்கியை வைத்து பிடித்து கரோல் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர் வனத்துறையினர்


நமது செய்தியாளர் :திருச்சூர் பைசில்

Post a Comment

Previous Post Next Post