அதுவும் ஒரு உயிர் தானே ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் மனிதாபிதானம்....
கோத்தகிரியில் ரத்தக்காயங்களுடன் கிடந்த குரங்கை ஆம்புலன்ஸில் ஏற்றிச்சென்ற ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
நீலகிரி கோத்தகிரி நகர் புறத்தில் ரத்த காயங்களுடன் கிடந்த குரங்கை மீட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கொண்டு சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது உயிர் போகும் இறுதி நொடியில் குரங்கு தத்தளித்து கொண்டிருக்கும் நேரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஸ்ட்ரக்சரில் வைத்து எவ்வளவு வேகமாக செல்ல முடியுமோ அவ்வளவு வேகமாக ஆம்புலன்ஸை இயக்கி குரங்கை காப்பாற்ற முயற்சித்துள்ளார் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் காயப்பட்ட குரங்கை வனத்துறையினரிடம் ஒப்படைத்தார் எல்லாம் உயிர் தான் என்ற எண்ணத்தோடு ஆம்புலன்ஸ் டிரைவர் உயிருக்கு போராடிய குரங்கை ஆம்புலன்சில் ஏற்றுக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பெரும் பாராட்டை பெற்று வருகிறது .
ஏனென்றால் அதுவும் ஒரு உயிர் தானே
நமது செய்தியாளர் :கரன்சி சிவகுமார்