கோத்தகிரி குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை மட்டும் கருஞ்சிறுத்தை சிசிடி காட்சி வைரல்
கோத்தகிரி:
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகள் பெரும்பாலும் வனப்பகுதிகள் தேயிலை தோட்டங்கள் கொண்டதாக உள்ளது இதனால் சிறுத்தை கரடி காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருகின்றன.
இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் இரவு நேரத்தில் அரை மணி நேர இடைவெளியில் முதலில் சிறுத்தை அதன் பின்பு கருஞ்சிறுத்தை உலா வந்தது இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளது இதனை அடுத்து குன்னூர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர் மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டு விட்டு வெளியே வர வேண்டாம் இரவு நேரங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்
நமது செய்தியாளர்: கரன்சி சிவகுமார்