Followers

சாலக்குடியில் நெற்றியில் காயத்துடன் சுற்றித்திரிந்து யானையை பிடித்தனர் சாலக்குடி வனத்துறையினர்

 சாலக்குடியில் நெற்றியில் காயத்துடன் சுற்றித்திரிந்து யானையை பிடித்தனர் சாலக்குடி வனத்துறையினர் 

சாலக்குடி:

சாலக்குடி அருகே வெற்றிலை பாறை பகுதியில் நெற்றியில் காயத்துடன் சுற்றி திரிந்த யானைக்கு ஜனவரி 24 தேதி வனத்துறையில் தலைமையில் கால்நடை மருத்துவர் டாக்டர் அருண் ஜக்காரியா தலைமையிலான கால்நடை மருத்துவர் குழுவினர் காயம் அடைந்த யானைக்கு சிகிச்சை அலித்தனர் மேலும் யானையை 24மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்தனர் வந்தனர் ஆனால் யானை யானது காயத்தின் மேல் நீரை பீச்சி அடித்தும் மணலை அள்ளிப் போட்டதாலும் காயம் ஆனது பெரிதானது இதனால் யாரை வழி தாங்க முடியாமல் சுற்றி திரிந்தது இதை உணர்ந்த  சாலக்குடி வனத்துறையினர் மேல் சிகிச்சைக்காக கோடநாடு செல்ல யானையை   புடிக்கும் முயற்சி ஈடுபட்டனர்.


கும்கி யானை வருகை :

 முதல் கட்டமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கோடநாடு யானைகள் பயிற்சி மையத்தில் சிறப்பு கூண்டு (கரோல்) தயரானது கோடநாடு பயிற்சி மையத்திலிருந்து கோனி சுரேந்திரன், விக்ரம், குஞ்சு, ஆகிய கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டு  19 தேதி காலை 5:00 மணி அளவில் யானையை பிடித்து முயற்சியில் மேற்கொள்ளப்பட்டது காலை 7 :15 மணியளவில் யானைக்கு கால்நடை மருத்துவர் அருண் ஜக்காரியா தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் யானைக்கு மயக்க மருந்து செலுத்தினர்   யானை யானது மெதுவாக நடந்து சென்று தனது நண்பனான கணபதி அருகே நின்றது சிறிது நேரம் கழித்து மயக்கம் அடைந்தது யானை உடனடியாக மருத்துவ குழுவினர் யானைக்கு நெற்றியின் காயத்துக்கு மருந்து வைத்தனர் பின்னர் மூன்று கும்கி யானைகளை வைத்து லாரியில் ஏற்றினர் வனத்துறையினர்


நமது செய்தியாளர் திருச்சூர் பைசில்

Post a Comment

Previous Post Next Post