Followers

நீலகிரி - பந்தலூர் வனச்சாலையில் இரு சக்கரம் வாகன மோதியதில் சிறுத்தை அடிபட்டு சாலையில் கிடப்பதும் சிறிது நேரம் கழித்து சிறுத்தை வன பகுதிக்குள் ஓடி மறைவதும் வீடியோ வைரல்

நீலகிரி - பந்தலூர் வனச்சாலையில் இரு சக்கரம் வாகன மோதியதில் சிறுத்தை அடிபட்டு சாலையில் கிடப்பதும் சிறிது நேரம் கழித்து சிறுத்தை வன பகுதிக்குள் ஓடி மறைவதும் வீடியோ வைரல் 



 நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடி நாயக்கன்சோலை வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டு யானைகள், மான்கள், கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இன்று காலை 7: 00கூடலூரில் இருந்து தேவாலாவுக்கு செல்லும் சாலையில் சாலையை கடக்க வந்த சிறுத்தையின் மீது இருசக்கர வாகனம் மோதியது இதில் சிறுத்தையும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கூடலூர் ராஜன் என்பவரும் சாலையில் விழுந்தனர் . அதிர்ஷ்டவசமாக ராஜன் லேசான காயத்துடன் தப்பினார் மேலும் இருசக்கர வாகனத்தில் அடிபட்ட சிறுத்தை சிறிது நேரம் சாலையில் கிடந்தது அந்த வழியில் வந்த வாகன ஓட்டிகள் சிறுத்தையை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர் திடீரென எழுந்த சிறுத்தை வனப்பகுதிக்கு ஓடியது இந்த காட்சி அப்பகுதியில் இருந்தவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் தற்போது வைரலாகி வருகிறது மேலும் நீலகிரி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு சிறுத்தைக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து வருகின்றனர் 


நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார் 

Post a Comment

Previous Post Next Post