நீலகிரி மாவட்டம் குன்னூர் நான்சச் பகுதியில் Ex Army வரதராஜ் தேயிலை தோட்டத்தில் மின் கம்பத்தில் தேன் சாப்பிடுவதற்கு ஏரி சென்ற. பெரிய கரடி மின்சாரம் தாக்கி பரிதாப பலி குன்னூர் வனத்துறை விசாரனை
நீலகிரி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் நான்சச் தனியார் தேயிலை தோட்டத்தில் அதிக எண்ணிக்கையில் கரடிகள் உள்ளது அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு உணவு மற்றும் தண்ணீ தேடி குட்டிகளுடன் வருவது வாடிக்கையாக உள்ளது இந்த நிலையில் குட்டிகளுடன் உணவு தேடி வந்த கரடி வீட்டின் அருகே மின் கம்பத்தில் தேனிக்கள் கூடு கட்டியிருப்பதை கண்டு மின் கம்பத்தில் ஏறி தேன் குடிக்க முயன்றப்போது மின்சாரம் தாக்கியதில் பெரிய கரடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது இதே மின் கம்பத்தில் சில வருடங்களுக்கு முன்பு தேன் சாப்பிட மின் கம்பத்தில் ஏரிய கரடி உயிரிழதது குறிப்பிடத்தக்கது
குன்னூர் வனசரகர் ரவீந்தரநாத் தலமையில் வனத்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்
நமது செய்தியாளர்: கரன்சி சிவக்குமார்