கோத்தகிரி நகர் பகுதியில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தை குடியிருப்பில் இருந்த வளர்ப்பு நாயை நீண்ட நேரம் போராடி வேட்டையாட முடியாமல் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...
நீலகிரி மாவட்டம்
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக உணவு தேடி வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு,சாலைகள்,தேயிலை தோட்ட பகுதிகளில் உலா வருகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி நகர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது.அப்போது வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாயை வீட்டின் உரிமையாளர் இரும்பு கூண்டில் அடைத்து வைத்துள்ளார்.இருந்தாலும் குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்றுள்ளது.வளர்ப்பு நாய் இரும்பு கூண்டில் இருந்த போதும்,
வளர்ப்பு நாய் குரைத்து சத்தம் எழுப்பியாலும் நீண்ட நேரம் போராடிய சிறுத்தை நாயை வேட்டையாட முடியாமல் திரும்பி வனப்பகுதிக்குள் சென்று விட்டது.இந்த காட்சி குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் அப்பகுதி ஆய்வு செய்து வருகின்றனர் மேலும் இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
நமது செய்தியாளர்:கரன்சி சிவக்குமார்