Followers

உடுமலை மூனார் சாலையில் 2 யானைகள் சண்டையிட்ட காட்சி வைரல் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் இயக்க வேண்டும் வனத்துறை அறிவுறுத்தல்

உடுமலை மூனார் சாலையில் 2 யானைகள் சண்டையிட்ட காட்சி வைரல் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் இயக்க வேண்டும் வனத்துறை அறிவுறுத்தல் 


உடுமலை :

ஆனை மலை புலிகள் காப்பகத்துக்குட்பட்டு உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. உடுமலையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் கேரள மாநிலம் மூணாறு உள்ளது.


இதனால், இரு மாநிலங்களுக்கும் இடையே தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் பகுதியாக ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. கடந்த சில நாட்களாக உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக காட்டு யானைகள் உடுமலை - மூணாறு சாலையை கடந்து செல்கின்றன. இந்நிலையில் இரண்டு ஆண் யானைகள் சாலை கடக்கும் பொழுது சண்டையிட்டவாறு கடந்து சென்றது இந்தக் காட்சி அவ்வழியில் சென்ற வாகன ஓட்டி வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது 



 இதைப்பற்றி வனத்துறை தெரிவிக்கையில்:

உடுமலை - மூணாறு சாலையில் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் எனவும், வன விலங்குகளை கண்டால் புகைப் படம் எடுப்பது, வன உயிர்களை துன்புறுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளோம். வன விலங்குகளுக்கு தொந்தரவு கொடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


நமது செய்தியாளர் உடுமலை பென்சமின் 


Post a Comment

Previous Post Next Post