வால்பாறை வன சாலைகளில் சுற்றுலா பயணிகளை ட்ரக்கிங் என்ற பெயரில் அழைத்து செல்பவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வனத்துறை எச்சரிக்கை
வால்பாறை:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது வால்பாறை இங்கு சிறுத்தை யானை சிங்க வால் குரங்குகள் வாழ்ந்து வருகிறது இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் அவ்வப்போது வாகன ஓட்டிகளின் கண்களில் தென்படுகிறது இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள கவர்க்கில் எஸ்டேட் பகுதியில் சிறுத்தை குட்டி ஒன்று வனச்சாலையில் தடுப்புச் சுவரில் நடந்து சென்றது அவ்வழியில் சென்ற வாகன ஓட்டி வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் தற்போது வைரலாகி வருகிறது
இதைப்பற்றி வனத்துறையினர் தெரிவிக்கையில் :
இரவு நேரங்களில் வனச்சாலையில் சிறுத்தை, யானை, காட்டுமாடு ,ஆகியவை சாலையைக் கடந்து வனப் பகுதிக்கும் செல்கிறது இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை இரவு நேரங்களில் ட்ரக்கிங் என்ற பெயரில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் மிரும் பட்சத்தில் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அபராதமும் விதிக்கப்படும் என்றனர்
நமது செய்தியாளர் வடிவேல்