வால்பாறையில் கரடிக்கு வழிவிட்ட 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தல்
வால்பாறை:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது வால்பாறை இங்கு யானை சிறுத்தை புலி கரடி ,அரிய வகைகள் பறவைகள் வாழ்ந்து வருகின்றன தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் மலைப்பகுதியில் வறட்சி நிலவுகிறது இதனால் நீர்நிலை நோக்கி படையெடுக்கிறது வன விலங்குகள் இதனால் அவ்வப்போது வனச்சாலையை பயன்படுத்துகிறது இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அட்டகட்டி பகுதியில் நேற்று காலை கரடி ஒன்று சாலையை கடக்க முற்பட்டுள்ளது அப்போது அவ்வழியாக சென்ற 108 ஆம்புலன்ஸ் மற்றும் பிற வாகனங்கள் கரடி சாலையை கடந்து செல்லும் வரை காத்திருந்து பின்பு வாகனங்களை இயக்கியுள்ளனர் இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையில் வனவிலங்குகளுக்கு தேவையான குடிநீர் போதிய அளவு உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் வனவிலங்குகள் தாகம் தணிக்க, 10 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும்
யானைகள் பகல் நேரத்தில் தான் குடிநீரை தேடி செல்லும் என்பதால், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், பணிபுரியும் எஸ்டேட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். என்று அறிவுறுத்தி உள்ளோம்
வால்பாறை - பொள்ளாச்சி வனச் சாலையில் வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதாலும் அவைகள் அவ்வப்போது சாலையை கடக்கும் நிலை உள்ளதால் வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கவனமாக செல்லவேண்டும் என்றும் ஆழியார் மற்றும் அட்டகட்டி சோதனைச் சாவுகாடியில் வனத்துறை ஊழியர்கள் பதாகைமூலியமாகவும் வாய்மொழியாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்றனர்
ஒளிப்பதிவாளர் வடிவேல் உடன் செய்தியாளர் வால்பாறை ரவிச்சந்திரன்