Followers

திம்பம் 8வது கொண்டை ஊசி வளைவில் சிறுத்தை நடமாட்டம் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

 திம்பம் 8வது கொண்டை ஊசி வளைவில் சிறுத்தை நடமாட்டம்  வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை 


ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. தமிழக - கர்நாடகா இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் திம்பம் மலைப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.



திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம்

இந்நிலையில் நேற்று இரவு திம்பம் மலைப்பாதையில் 8 கொண்டை ஊசி வளைவில் சிறுத்தை ஒன்று சாலையில் உலா வந்து  தடுப்புச் சுவரில் சிறிது தூரம் நடந்து சென்றது இந்த காட்சி வழியில் சென்ற வாகன ஓட்டி வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் தற்போது வைரலாகி வருகிறது 


இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். சிலர் இயற்கை அழகை ரசிப்பதாக கூறி வாகனங்களை சாலையோரம் நிறுத்தி செல்போன்களில் படம் எடுத்து வருகின்றனர். இது ஆபத்தான செயலாகும். இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்


நமது செய்தியாளர் முருகானந்தம்

Post a Comment

Previous Post Next Post