தமிழகத்தின் வரையாடு கணக்கெடுப்பு பணி துவங்கியது
தமிழகத்தில் நீலகிரி வரையாடுகளை பாதுகாப்பதற்கான சிறப்பு திட்டம், 2022ல் துவங்கப்பட்டது. இதன்படி, நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கையை அறிவது, அதன் வாழிடங்களை பாதுகாப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முதல்முறையாக, கடந்த ஆண்டு ஏப்ரல், 29ல் வரையாடுகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழக, கேரள வனப்பகுதிகளில், இரண்டு மாநில வனத்துறையினரும் இணைந்து இப்பணியை மேற்கொண்டனர்
இந்த கணக்கெடுப்பில், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வரும் முக்கூர்த்தி தேசிய பூங்கா, கோவை மாவட்டம் வால்பாறை, பொள்ளாச்சி, வனச்சரகம் உள்ளிட்ட இடங்களில், 1,031 வரையாடுகள் இருப்பதாக உறுதிப்படுத்தினர்
இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான கணக்கெடுப்பு தமிழக, கேரள வனத்துறையினர் இணைந்து, இன்று முதல் 27ம் தேதி வரை நான்கு நாட்கள் வரையாடுகள் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்தனர்,
அதன்படி ஆனைமலை புலிகள் காப்பகம் ஆழியார் மங்கரை சுற்று பகுதிகளில் இன்று காலை முதல் கணக்கெடுக்கும் பணியில் ஒரு வனவர். ஒரு வனக்காப்பாளர். ஒரு வேட்டை தடுப்பு காவலர். என மூன்று பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த கணக்கெடுப்பில் வரையாடுகளில் எச்சம். கால் தடம். மற்றும் நேரில் பார்ப்பதை ஜிபிஎஸ் கருவி மூலமும் பதிவு செய்தும் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
தமிழகத்தில், 176 இடங்களில் வரையாடுகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நமது சிறப்பு செய்தியாளர் : வடிவேல்