Followers

மேட்டுப்பாளையம் அருகே நடக்க முடியாமல் ஒரே இடத்தில் நின்ற காட்டு யானைக்கி மருத்துவக்குழு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

மேட்டுப்பாளையம் அருகே நடக்க முடியாமல் ஒரே இடத்தில் நின்ற  காட்டு யானைக்கி மருத்துவக்குழு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது



மேட்டுப்பாளையம்:

சிறுமுகை வனச்சரக பெத்திகுட்டை பிரிவு கூத்தாமண்டி பகுதியில் காட்டு யானை ஒன்று நிற்பதை பார்த்து விவசாயி ஒருவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த வனத்துறையினர் யானை வனப்பகுதிக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர் ஆனால் காட்டு யானை நகராமல் ஒரே இடத்தில் நின்றது. உடனடியாக வனத்துறை ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் 


உடனடியாக, யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். மருத்துவக் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையிலான குழு யானையை பரிசோதித்தது. யானையின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை. ஆனால், உள் உறுப்புகளில் ஏதோ பிரச்சனை இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகித்தனர்.

முதலில், யானைக்கு வலி நிவாரணி மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகளை பழங்களில் வைத்து கொடுத்தனர். "தற்போது கொடுக்கப்பட்டுள்ள மருந்துகளின் மூலம் யானையின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படுகிறதா என முழுமையாக கண்காணித்து பின்னர் அதன் பாதிப்புகளின் தன்மைக்கேற்ப சிகிச்சை தொடரும்" என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.


யானைக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனாலும், வனத்துறையினர் யானையை காப்பாற்ற தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். யானையின் உடல்நிலை சீராகும் வரை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளிப்பார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


நமது செய்தியாளர்: மேட்டுப்பாளையம் இமாலயா 

Post a Comment

Previous Post Next Post