அதிரப்பள்ளி அருகே – நான்கு காட்டு யானைகள் உறங்க, காவல் காத்த தோழி யானை – வீடியோ வைரல்
வால்பாறை:அதிரப்பள்ளி அருகே உள்ள வெற்றிலை பாறை பகுதியில், என்னை பண்ணை தோட்டத்தில் நான்கு யானைகள் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்க, அருகில் ஒரு தோழி யானை விழித்த படி சுற்றுப்புறத்தை கவனித்து, காவல் காத்துக் கொண்டிருப்பது பதிவாகியுள்ளது.
வனவிலங்கு ஆர்வலர்கள் கருத்து:
யானைகள் மிகவும் சமூக வாழ்வை கடைப்பிடிக்கும் விலங்குகள். கூட்டமாகச் செல்லும் அவை, ஓய்வெடுக்கும் போது ஒரு அல்லது இரண்டு யானைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது இயல்பான பழக்கம். இது, கூட்டத்தில் உள்ள பிற யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இயற்கையான நடத்தையாகும்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள்:
இயற்கையில் விலங்குகளின் வாழ்க்கை முறையை பாதிக்காமல், அவற்றை தொலைவிலிருந்து மட்டுமே கவனிக்க வேண்டும். குறிப்பாக யானைகளின் ஓய்வு நேரத்தில் அருகில் சென்று புகைப்படம் எடுப்பது அல்லது சத்தம் போடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
நமது செய்தியாளர்: வடிவேல்