கோவை: சாடிவயல் அருகே கிணற்றில் விழுந்த யானை உயிரிழப்பு
கோவை:
கோவை சாடிவயல் அருகே உள்ள சோலைப்படுகை பகுதியில், நள்ளிரவில் மூன்று யானைகள் தோட்டப்பகுதிக்கு வந்தன. பின்னர் அவை மீண்டும் காட்டுக்குள் திரும்பிக் கொண்டிருந்தபோது, இரண்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்ற நிலையில், ஒரு யானை மட்டும் அங்கிருந்த நிர்மலா என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது.
கிணற்றுக்குள் விழுந்த யானையை மீட்கும் பணிகள் வனத்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
நமது செய்தியாளர்: வடிவேல்