மூணாறில் படையப்பா யானை – வாழை மரத்தை ருசி பார்த்த காட்சி வைரல்
மூணார்:
கடந்த சில நாட்களாக மாட்டுப்பட்டி, குட்டியார்வேலி உள்ளிட்ட பகுதிகளில் அலைந்து திரிந்த படையப்பா யானை, நேற்று அறுவிக்காடு எஸ்டேட் மற்றும் பச்சைக்காடு பகுதிகளில் உலா வந்தது.
அறுவிக்காடு தேயிலைத் தோட்டத் தொழிற்சாலை பகுதியில் சுற்றித் திரிந்த படையப்பா, அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த வாழை மரத்தை ருசி பார்த்தது. பின்னர், மெதுவாக வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றது.
இந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கருத்து:வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதன் பின்னணி — உணவுக்கான தேவை, காடு சுருக்கம் போன்ற காரணங்களை புரிந்து கொள்வதும் அவசியம்.
— நமது செய்தியாளர், மூணார் மணிகண்டன்
Tags:
மூணார் படையப்பா