Followers

உதகை அருகே வீட்டின் கதவைத் தட்டிய கரடி – உரிமையாளர் அதிர்ச்சி

 உதகை அருகே வீட்டின் கதவைத் தட்டிய கரடி – உரிமையாளர் அதிர்ச்சி


நீலகிரி:

நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீதம் வனப்பகுதி உள்ள நிலையில், வனவிலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி காணப்படுகின்றன.


சமீபத்தில், உதகை அருகே புதுமந்து பகுதியில் கரடி ஒன்று வீட்டின் கதவை தட்டியது. சத்தம் கேட்ட வீட்டின் உரிமையாளர் கதவைத் திறந்தபோது, முன் கதவின் முன் கரடி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.


நல்வாய்ப்பாக, கரடி யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் வீட்டின் படியிலிருந்து இறங்கி வனப்பகுதிக்குள் சென்றது.


இந்த காட்சிகள் வீட்டினுள் இருந்தவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார் தற்போது இந்த வீடியோ  வைரலாகி வருகின்றன.

இதைப் பற்றி வன ஆர்வலர்கள் தெரிவிக்கையில்: 

"மனிதர்கள் குடியிருப்பு பகுதிகளை விரிவாக்கும் போது, வனவிலங்குகள் உணவு தேடிக் கிராமங்களும் நகரங்களும் நோக்கி வருவது அதிகரித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் வனவிலங்கு பாதுகாப்பும், மனிதர்-வனவிலங்கு மோதல் தடுப்பு மிக அவசியம் என்பதைக் காட்டுகிறது. 

நமது செய்தியாளர் :கரன்சி சிவகுமார்

Post a Comment

Previous Post Next Post