*அதிரப்பள்ளியில் கனமழையால் ஆற்றில் சிக்கிய காட்டு யானை – வெள்ளத்தில் தத்தளிக்கும் காட்சி வைரல்!*
திருச்சூர்:
திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அதிரப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஆறுகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கில் ஒரு காட்டு யானை சிக்கிக்கொண்டது. நீரில் தத்தளித்த அந்த யானை, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு எச்சரிக்கையுடன் கரையினை எட்டியது.
இந்த காட்சியை அருகிலிருந்தவர்கள் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிகழ்வு, இயற்கை பேரழிவுகளின்போதும் வனவிலங்குகள் எப்படி போராடுகிறார்கள் என்பதையும், அவற்றின் பாதுகாப்பு முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது.
நமது செய்தியாளர்: வடிவேல்
