மூணார் எஸ்டேட் பகுதியில் பிறந்த யானை குட்டி எழ முடியாமல் இருப்பது பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது- யானை குட்டியை RRT குழு கண்காணிப்பு
மூணார்:
மூணார் அருகே உள்ள மாட்டுப்பட்டி எஸ்டேட் பகுதியில் இன்று அதிகாலை காட்டு யானை ஒன்று குட்டியை ஈன்றது. ஆனால், குட்டி யானை எழ முடியாமல் நீண்ட நேரம் படுத்திருந்ததால் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் கவலை மற்றும் பரபரப்பு ஏற்பட்டது.
யானை குட்டி படுத்த நிலையில் கவனித்த பொதுமக்கள் உடனடியாக மூணார் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், தாய் யானையையும் குட்டியையும் அருகிலிருந்து கண்காணித்து வருகின்றனர்.
குட்டி யானை எழ முடியாமல் சோர்வான நிலையில் இருப்பதை அறிந்த வனத்துறையினர் வனவிலங்கு மருத்துவக் குழுவை அழைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர்.
*நமது செய்தியாளர்: மூணார் மணிகண்டன்*
