Followers

குன்னூரில் தேன் எடுக்க மரத்தில் ஏறிய கரடிகள் – பொதுமக்களை கண்டு கீழே இறங்கி ஓடியது

 குன்னூரில் தேன் எடுக்க மரத்தில் ஏறிய கரடிகள் – பொதுமக்களை கண்டு கீழே இறங்கி ஓடியது


நீலகிரி:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கீழ் பாரதிநகர் பகுதியில் இன்று காலை வியப்பூட்டும் சம்பவம் ஒன்று நடந்தது. அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில், இரண்டு கரடிகள் தேன் எடுக்க ஒரு பெரிய மரத்தில் ஏறின.

அந்த நேரத்தில் அங்கு சென்ற பொதுமக்கள் தூரத்தில் நின்று அதைக் கவனித்தனர். திடீரென மனிதர்களின் சத்தம் கேட்டு, ஒரு கரடி பயந்து, அவசர அவசரமாக மரத்திலிருந்து கீழே இறங்கி வேகமாக காடு நோக்கி ஓடின. இந்த காட்சி அங்கு இருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது. சிலர் அதைப் பார்த்து ரசித்தும், வீடியோவாக பதிவு செய்தும் உள்ளனர்.


கடந்த சில மாதங்களாக நீலகிரி மாவட்டத்தில் கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, அவை உணவுக்காக  தேயிலை தோட்ட பகுதியிலும்  வனச்சாலையிலும் உலாவுவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது 

நமது செய்தியாளர்: கரன்சி சிவகுமார்

Post a Comment

Previous Post Next Post