மூணார் – குண்டலை கிளப்பில் காட்டு யானைகள், காட்டு மாடுகளுடன் சேர்ந்து உணவு தேடிய காட்சி
மூணார்:
மூணாறு பகுதியில் கடந்த சில நாட்களாகவே காட்டு யானைகள் உணவுக்காக கிராமப்புறங்களில் அடிக்கடி சுற்றித் திரிந்து வருகின்றன. குறிப்பாக, நான்கு யானைகள் கொண்ட ஒரு கூட்டம் ஷான்டோஸ், குண்டலை, எல்லப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து உலாவி வந்தது.
இன்று (புதன்கிழமை) காலை, அந்த யானைக் கூட்டம் எல்லப்பட்டி சாலையை கடந்து குண்டலை கிளப்பிற்குள் நுழைந்தது. அங்கு பசுமையான புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த காட்டு மாடுகளின் கூட்டத்துடன் சேர்ந்து, யானைகளும் அமைதியாக புல்களை மேய ஆரம்பித்தன.
நமது செய்தியாளர் :மூணார் மணிகண்டன்