வயநாடு – புல்பள்ளி சேக்காடி வனக் கிராம மழலையர் பள்ளிக்குள் புகுந்த குட்டி யானையால் பரபரப்பு
வயநாடு:வயநாடு அருகே உள்ள சேக்காடி வனக் கிராமத்தில் இன்று காலை வியப்பூட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றது. அப்பகுதியில் இயங்கும் மழலையர் பள்ளி வளாகத்திற்குள், சுமார் ஒரு வயது கொண்ட குட்டி யானை நுழைந்தது.
பள்ளி வளாகத்தில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த குட்டி யானையை கண்ட ஆசிரியர்களும், கிராம மக்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இந்த தகவல் வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தின் வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
நமது செய்தியாளர்: சுஜித்