மலுக்குப்பாறை – தேயிலை தோட்ட மதில் சுவரில் சிறுத்தை அமர்ந்த காட்சி சுற்றுலா பயணிகள் செல்போனில் பதிவு செய்துள்ளனர் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது
வால்பாறை:
வால்பாறை அடுத்துள்ள மளுக்குப்பாறை சாலையில், தேயிலை தோட்டத்தின் மதில் சுவரின் மீது சிறுத்தை ஒன்று அமைதியாக அமர்ந்திருந்தது.
அந்த நேரத்தில், அதிரப்பள்ளியில் இருந்து வால்பாறை நோக்கி வந்த சுற்றுலா பயணிகள், இந்த அபூர்வ காட்சியை கவனித்து, தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, வனவிலங்கு ஆர்வலர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. வனத்துறை, விலங்குகள் இருக்கும் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், வனவிலங்குகளை தொந்தரவு செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
நமது செய்தியாளர் வடிவேல்