Followers

குன்னூர் – அரசு பேருந்துக்கு முன் நீண்ட தூரம் சென்ற கரடி, வீடியோ வைரல்

 குன்னூர் – அரசு பேருந்துக்கு முன் நீண்ட தூரம் சென்ற கரடி, வீடியோ வைரல்


குன்னூர்:

குன்னூர் அருகே உள்ள சந்தக்கடை டேன்டீ பகுதியில், பக்காசூரன் மலை கிராமத்திற்கு சென்ற அரசு பேருந்தின் முன்பாக கரடி ஒன்று நீண்ட தூரம் வழிவிடாமல் நடந்துசென்றது.


இந்த அபூர்வ காட்சியை பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து, இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



வன ஆர்வலர்கள் மற்றும் வனத்துறையின் கருத்து: 

 வனவிலங்குகள் சாலைகளில் நீண்ட தூரம் நகரும் சம்பவங்கள், மனிதர்கள் மற்றும் விலங்குகள் ஒரே இடத்தைப் பகிர்ந்து கொள்ளும் நிலையை வெளிப்படுத்துகின்றன. வனப்பகுதிகள் வழியாகச் செல்லும் போது, குறிப்பாக வனவிலங்குகள் சாலையில் நடக்கும் போது, வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து, அவை பாதுகாப்பாக நகர அனுமதிக்க வேண்டும் என்பது வனத்துறை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது


நமது செய்தியாளர் கரன்சி சிவகுமார்

Post a Comment

Previous Post Next Post