வால்பாறை – மருத்துவமனை அருகே பலாப்பழக் கடையில் உணவு தேடிய ஒற்றை யானை வீடியோ வைரல்
வால்பாறை:வால்பாறை அருகே உள்ள ஐயர்பாடி எஸ்டேட் மருத்துவமனை அருகே, நேற்று இரவு ஒரு ஒற்றை காட்டுயானை சுற்றித்திரிந்தது. மருத்துவமனைக்கு அருகிலிருந்த சாலையோர பலாப்பழக் கடையின் மணம் வீசியதால், அது அங்கு நுழைந்து, தனது தும்பிக்கையால் பலாப்பழங்களைத் தேடியது.
இந்த அபூர்வ காட்சியை அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டியொருவர், தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வனவிலங்குகள், குறிப்பாக யானைகள், தங்களுக்குப் பிடித்த உணவின் மணத்தை தொலைவில் இருந்தே உணரக்கூடியவை. எனவே, வனப்பகுதிகளுக்கு அருகிலுள்ள இடங்களில், வனவிலங்குகளுக்கு பிடித்த உணவுகளை (பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம் போன்றவை) பொதுவெளியில் விற்பனை செய்யும்போது, அவற்றை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். என அறிவுறுத்தல்
இந்த செய்தியாளர் :வால்பாறை ரவிச்சந்திரன்