குன்னூரில் உலக யானைகள் தினம் முன்னிட்டு மாணவ–மாணவியர் உறுதிமொழி
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெற உள்ள உலக யானைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின்படி, குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ–மாணவியர்களுக்கு யானைகள் பாதுகாப்பு, மனித–விலங்கு ஒத்துழைவு உள்ளிட்ட அம்சங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், குன்னூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
யானைகள் தினம்
யானைகள் என்பது வெறும் வனவிலங்குகள் அல்ல; அவை நமது காடுகளின் காவலர்கள், இயற்கையின் சமநிலையை பேணும் முக்கிய உயிரினங்கள். உலக யானைகள் தினம் நமக்கு, புத்திசாலியான உயிர்களை காப்பதற்கான பொறுப்பை நினைவூட்டுகிறது.
மனித விரிவாக்கம், காடு அழிவு, மற்றும் சட்டவிரோத வேட்டைகள் ஆகியவை யானைகளின் வாழ்வை ஆபத்தில் ஆழ்த்துகின்றன. இந்த நிலையை மாற்றுவதற்கு, மக்கள்–விலங்கு ஒத்துழைவு, பாதுகாப்பான பாதைகள், மற்றும் உணவு–தண்ணீர் வளங்களைப் பேணுதல் ஆகியவை அவசியம்.
யானைகளை காப்பது என்பது, நமது உயிரியல் பல்வகைமையையும், காடுகளின் ஆரோக்கியத்தையும் காப்பது ஆகும்.
இயற்கையுடன் இணைந்து வாழும் எதிர்காலத்திற்காக, இன்றே நமது உறுதிமொழியை புதுப்பிப்போம்
நமது செய்தியாளர் :கரன்சி சிவக்குமார்
