வால்பாறை அருகே யானைகள் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கும் வனத்துறையினர்
வால்பாறை:
வால்பாறை மற்றும் அதனை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்ட பகுதியில் யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து பதிவாகி வருகிறது. இதனை தொடர்ந்து, வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேயிலை தோட்ட அருகே வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் யானையின் பின் தொடர்ந்து யானைகளை கண்காணித்து வருகின்றனர் . வனத்துறையினர்
யானைகளை எதிர்கொள்ளும் நேரத்தில் பொதுமக்கள் அச்சப்படாமல், உடனடியாக வனத்துறையிடம் தகவல் வழங்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, “யானைகள் வலம்வரும் பாதைகள், தண்ணீர் தேடும் இடங்கள் போன்ற முக்கியமான தகவல்களை கண்காணித்து, அவை மக்கள் பகுதிக்கு நுழையாமல் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தனர்.
நமது செய்தியாளர்: வடிவேல்