நீலகிரி – கூடலூர் சாலையில் சுற்றித்திரிந்த கரடி – வீடியோ வைரல்
நீலகிரி:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வன விலங்குகள் சாலைகளில் தோன்றுவது இயல்பான சம்பவமாகவே காணப்படுகிறது. இன் நிலையில்
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள பாடந்துறை சாலையில் இரவு நேரத்தில் ஒரு பெரிய கரடி சாலையில் சுற்றித்திரிந்தது. அப்போது அந்த சாலையை கடந்து சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகன விளக்கின் வெளிச்சத்தில் கரடியை தெளிவாகக் கண்டனர். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.
வீடியோவில், கரடி அமைதியாக சாலையைத் தாண்டிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. திடீரென சாலையில் கரடியை கண்ட வாகன ஓட்டிகள் சில நொடிகள் பதற்றமடைந்தாலும், கரடி யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் வனப்பகுதியை நோக்கிச் சென்றது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே பெரும் பரபரப்பு நிலவுகிறது.
வனத்துறை அதிகாரிகள், “கரடிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் உணவு தேடி சாலைகளின் அருகே வந்து விடக்கூடும். மக்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும். வன விலங்குகளைத் தூண்டவோ, அச்சுறுத்தவோ கூடாது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நமது செய்தியாளர் :கரன்சி சிவகுமார்
