நீலகிரி – தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காட்டு யானை – வனத்துறையினர் விரைந்து மீட்டு பரபரப்பு
நீலகிரி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோழிக்கரை பழங்குடியினர் கிராமத்தில் இன்று அதிகாலை பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
சமவெளிப் பகுதிகளான மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், சிறுமுகை போன்ற வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுவதால், உணவும் தண்ணீரும் தேடி காட்டு யானைகள் ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டம் நோக்கி அலைந்து வருகின்றன. மேலும், இக்காலத்தில் மலைப்பகுதிகளில் பலாப்பழ சீசன் துவங்கியிருப்பதால், குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, பரலியார், கே.என்.ஆர்., மரப்பாலம் உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி யானைகள் சுற்றித்திரிகின்றன.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நமது செய்தியாளர்: கரன்சி சிவகுமார்
