Followers

நாட்டுத்துப்பாக்கி கொண்டு வனவிலங்குகளை வேட்டையாடுவது கூடாது. வனத்துறை எச்சரிக்கை


 கோவை மாவட்டம், கோவை வன கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நாட்டுவெடி, அவுட்டுக்காய், சுருக்குக்கம்பி,வலை போன்றவைகளை பயன்படுத்தி காப்புகாடுகள், மேய்ச்சல் நிலங்கள், காப்பு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில் முயல்,பன்றி,மான், காட்டு மாடு போன்ற வனவிலங்குகளை

இறைச்சிக்காக வேட்டையாடுவது, காட்டு மாடு,யானைகள் போன்ற வனவிலங்குகளை துன்புறுத்துவது போன்ற குற்றங்களில் தொடர்ந்து சிலர் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.


இக்குற்றங்களை கண்டுபிடிக்கவும், தடுக்கவும் மாவட்ட வன நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேட்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் சந்தேகத்திற்குட்பட்ட பகுதிகளில் 

சட்ட விரோதமாகவும் மற்றும் அடையாளம் தெரியாத நாட்டு துப்பாக்கிகள்  வைத்திருப்பவர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆதலால் யாரும் நாட்டு துப்பாக்கிகள் ஏதும் வைத்திருந்தால் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 1973/102 பிரிவின்படி குற்றமாகும்.ஆகவே, வருகின்ற செப்டம்பர் 30,  2023 தேதிக்குள் தாமாக முன்வந்து வனத்துறையினரிடமோ காவல்துறையிடமோ அல்லது ஊர் பஞ்சாயத்து தலைவரிடமோ நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டியது.


இது போன்று  நாட்டுத்துப்பாக்கி கொண்டு வனவிலங்குகளை வேட்டையாடுவது கூடாது. 


எனவே, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நாட்டு துப்பாக்கிகள்

ஒப்படைக்காவிட்டால் பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் உதவியுடன் வனத்துறையினரால் நாட்டு துப்பாக்கிகள் கண்டறியப்படும் பட்சத்தில் இந்திய ஆயுத சட்டம் 1959ன் படி காவல்துறையின் மூலமும், வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 ன் படி வனத்துறை மூலமும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


மேலும் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள், அவுட்டுக்காய் தயாரிப்பவர்கள், வெடி மருந்துகளை தவறாக பயன்படுத்துபவர்கள், அதனை பதுக்கி வைத்திருப்பவர்கள் தொடர்பான விவரங்கள் ஏதேனும் தெரிந்தால் வனத்துறையினர் அல்லது காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


செய்தியாளர் 

ந.வடிவேல்

Post a Comment

Previous Post Next Post