Followers

வால்பாறை சாலக்குடி சாலையில் காட்டு யானை அருகே சென்று சேட்டை செய்த நபர் கைது

 வால்பாறை  சாலக்குடி சாலையில் காட்டு யானை அருகே சென்று சேட்டை செய்த  சபீர் 35வயது என்பவரை கைது செய்யப்பட்டுள்ளார்.


திருச்சூர்மாவட்டம் அதிரப்பள்ளி வனச்சரக பகுதி, யானைகளின் வாழ்விடமாக உள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட யாரும் வாகனங்களை நிறுத்தவும், வாகனங்களில் இருந்து இறங்கவும் கூடாது என வனத்துறை சார்பில் ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.




இந்நிலையில், அம்பலப்பாறை சோதனை சாவடி அருகே சில நாட்களாக கபாலி ஆண் யானை ஒன்று சாலையோரம் நடமாடி வருகிறது. இந்த யானையை ஞாயிற்றுக்கிழமை அம்பலப்பாறை சோதனை சாவடி அருகே ரோட்டை கடக்கும் பொழுது எதிர்பாராமல்  ஆரன் ஒலித்ததால் கோபம் கொண்ட கபாலியானை அந்த காரை தாக்கியது சுதாரித்துக் கொண்ட வாகன ஓட்டிகள் வாகனத்தை விட்டு வெளியேறி பின்புறம் உள்ள வாகனத்தில் ஏறிக் கொண்டனர்  இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா வந்த ஒரு குழுவில் இடம்பெற்றிருந்தவர் ஒற்றை யானையை பார்த்ததும் வாகனத்தை விட்டு இறங்கியுள்ளார்.

பின்னர் யானைக்கு வெகு அருகில் நடந்து சென்று இரு கைகளை தூக்கி சேட்டையில் ஈடுபட்டிருந்தனர்   கேமராவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இவரது இந்த செய்கைகளின்போது அந்த ஒற்றை யானை மண்ணை காலால் உதைத்து சிதற விட்டும், செடிகளை ஆக்ரோஷமாக வளைத்து மிதித்தும் பிளிறுகிறது. சுமார் 1 நிமிடம் வரை அவர் இவ்வாறு யானை அருகே நின்று சேட்டைகளை செய்துவிட்டு திரும்பிச் செல்கிறார். இந்த காட்சிகளை எதிரே வந்த கேரளா அரசு பேருந்து பயணித்தவர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர் இந்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருச்சூர் வனத்துறை தெரிவித்துள்ளது


நமது செய்தியாளர் வடிவேல்

Post a Comment

Previous Post Next Post