கோத்தகிரி கடைவீதி பகுதியில் சாலையில் நடந்து சென்றவரை கரடி துரத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சாலையின் குறுக்கே கரடி திடீரென வந்தததால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பிரேக் பிடித்து வாகனத்தை நிறுத்தியதால் மயிரிழையில் உயிர் தப்பினார்.
நீலகிரி மாவட்டம்கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி , காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வன விலங்குகள் அவ்வப்போது குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து விடுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் குடியிருப்புகள் நிறைந்த கோத்தகிரி கடைவீதி பகுதியில் தனியார் கிளினிக் அருகே திடீரென சாலையின் குறுக்கே கரடி ஒன்று வந்தது. அப்போது அவ்வழியாக வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றவர் கரடியை கண்டு பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினார். கரடி அருகில் இருந்த தனியார் கிளினிக் அருகே உள்ள சந்தில் சென்று மீண்டும் திரும்பி சாலையில் உள்ள. குடியிருப்பு பகுதிக்கு வந்தது அப்போது அந்த சாலையில் நடந்து சென்ற ஒருவரை கரடி திடீரென துரத்த ஆரம்பித்தது இதனால் அச்சம் அடைந்தவர் அங்கிருந்து ஓடி சென்றார் அதேபோல மோட்டார் சைக்கிளில் கரடிக்கு பயந்து நின்றவரும் அச்சத்தால் அங்கிருந்து வேகமாக மோட்டார் சைக்கிளை இயக்கி சென்றார் இதனால் அவர் மயிரிழையில் உயிர்த் தப்பினார். இந்த காட்சிகள் அப்பவே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது இதைப்பற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் அந்த கரடியை கண்காணித்து வருகின்றனர்
நமது செய்திகளை: கரன்சி சிவக்குமார்