Followers

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பஜாரில் இரவு நேரத்தில் உலா வந்த கரடியை பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சூழ்ந்து துரத்தின...


 நீலகிரி மாவட்டம் பந்தலூர் பஜாரில் இரவு நேரத்தில் உலா வந்த கரடியை பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சூழ்ந்து துரத்தின...



கூடலூர் பந்தலூர் பகுதிகளில் சமீப நாட்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது குறிப்பாக இரவு நேரங்களில் யானை கரடி சிறுத்தை போன்ற வனவிலங்குகள் சர்வசாதாரணமாக உலா வருகின்றன இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர் இந்த நிலையில் பந்தலூர் பஜார் பகுதியில் நேற்று இரவு உலா வந்த கரடி அங்கும் இங்கும் சுற்றி திரிந்தது இதைக் கண்ட தெருவில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் குறைத்துக் கொண்டே இருந்தன அப்போது அருகில் இருந்தவர்கள் சாலையில் பார்க்கும் பொழுது கரடி உலா வந்தது கண்டு அச்சமடைந்தனர் அப்போது பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் கரடியை சூழ்ந்து குறைத்து துரத்தின இதில் கரடி ஓட்டம் பிடித்தது இரவு நேரங்களில் கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர் எனவே பந்தலூர் பஜாரில் நடமாடும் கரடியை வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார் 

Post a Comment

Previous Post Next Post