Followers

வால்பாறை சாலக்குடி சாலை அருகே யானையின் தந்தம் உடைந்தநிலையில் கண்டெடுத்த வனத்துறையினர்


 வால்பாறை  சாலக்குடி சாலை அருகே யானையின் தந்தம் உடைந்தநிலையில் கண்டெடுத்த வனத்துறையினர்



 திருச்சூர்மாவட்டம் அதிரப்பள்ளி வனச்சரக பகுதி, யானைகளின் வாழ்விடமாக உள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட யாரும் வாகனங்களை நிறுத்தவும், வாகனங்களில் இருந்து இறங்கவும் கூடாது என வனத்துறை சார்பில் ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், வெற்றிலைபாறை சோதனை சாவடி அருகே எண்ணெய்பனைமரம் தோட்டத்தில்  தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பனைமரம் அருகே யானையின் கொம்பு உடைந்து நிலையில் இருந்ததை கண்ட தோட்டத் தொழிலாளர்கள் உடனடியாக அதிரப்பள்ளி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் யானையின் கொம்பை கை பற்றி விசாரணை மேற்கொண்டனர் மேலும் பனை மரத்தை உடைக்கும் பொழுது பனை மரத்தில் கொம்பு மாட்டி உடைந்து இருக்கலாம் அல்லது இரு யானை சண்டையிட்டு உடைந்து இருக்கலாம் என பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்



நமது செய்தியாளர் வடிவேல்

Post a Comment

Previous Post Next Post