திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் புலி உயிரிழப்பு..
ஆனைமலை புலிகள் காப்பகம் காப்பகம் அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்..
அப்போது அமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட கழுதகட்டி ஓடைப்பகுதியில் புலி ஒன்று உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
பின்பு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் புலியை பார்த்தபோது உயிரிழந்த புலிக்கு 9 வயது இருக்கும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்..
புலியின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை எனவும் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு புலியின் உயிரிழப்புக்கு காரணங்கள் தெரியவரும் என தெரியவரும் எனவும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனரும் கோவை மண்டல தலைமை வன பாதுகாவலருமான ராமசுப்பிரமணியம் IFS. அவர்கள் தெரிவித்துள்ளார்..
நமது செய்தியாளர் வடிவேல்