வால்பாறை மந்திரி மட்டம் பகுதியில் பராமரிக்கப்பட்டு வரும் புலியை தனிக்குழுவினர் ஆய்வு
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட முடீஸ் எஸ்டேட் பொதுமக்கள் நடமாடும் பகுதியில் கடந்த 28.09.2021அன்று பிடிக்கப்பட்ட புலிக்குட்டிக்கு சிகிச்சை அளித்து தமிழகத்தில் முதல்முறையாக மந்திரி மட்டம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை சார்ந்த புலிக்கூண்டில் இதுவரை சுமார் ரூ.70 லட்சம் செலவில் பராமரிக்கப்பட்டு வரும் புலியின் உடல் நலம் குறித்தும் தற்போது அதன் வனம் சார்ந்த நிலை குறித்து தனிக்குழுவினர் ஆய்வு மேற்க் கொண்டனர் ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குநர் இராமசுப்ரமணியம் தலைமையில் துணை இயக்குநர் பர்கவதேஜா, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் பிரதிநிதி கணேஷ் ரகுநாதன், முதன்மை தலைமை வன பாதுகாப்பாளர் பிரதிநிதி பாலாஜி, ட்ராஃபிக் இந்தியா டிரஸ்ட் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக வனகால்நடை மருத்துவர் வியயராகவன், உதவி வனபாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் வே.செல்வம், பூமிநாதன்,ரவி கள இயக்குநர் அலுவலக உயிரியலாளர் பீட்டர், பிரேம், சக்கரவர்த்தி,துணை இயக்குனர் அலுவலக உயிரியலாளர் அன்வர் மற்றும் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன், வனப்பணியாளர்கள் கலந்து கொண்டு புலியின் நடவடிக்கை, வேட்டையாடும் திறன், வனப்பகுதியில் புலியை விடுவதற்கான இடம் தேர்வு, ரேடியோ காலர் பொருத்துதல் பணியினை செயல்படுத்துதல், புலியினை வனப்பகுதியில் விடப்பட்ட பின்னர் தொடர்ந்து கண்காணிப்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டது
செய்தியாளர் வால்பாறை ரவிச்சந்திரன்