Followers

ஓசூர் அருகே ஜவளகிரி வனப்பகுதியில் உயிரிழந்தயானையின் உடலில் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பது வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்

 ஓசூர் அருகே ஜவளகிரி வனப்பகுதியில் உயிரிழந்தயானையின் உடலில் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பது வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்




கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், ஜவளகிரி வனச்சரகம், வனப் பணியாளர்கள் ரோந்து பணியில்  ஈடுபட்ட பொழுது கக்கமல்லேஸ்வரம் கோவில் அருகே 16 வயது மதிக்கத்தக்க ஆண்யானை உடல் அழுகிய நிலையில் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உதவி வன பாதுகாவலர் ஓசூர் வனக்கோட்ட வனச்சரக அலுவலர் ஜவழகிரி தன்னார் தொண்டு நிறுவனத்தார் ஆகியோர் முன்னிலையில்  கால்நடை உதவி மருத்துவக் குழுவினர் நேற்று யானையை பிரேத பரிசோதனை செய்தனர்.



அப்போது, யானையின் தலையில் துப்பாக்கி குண்டு இருந்தது. யானையின் உடலில் இரு தந்தங்களும் இருந்ததால், அதை தந்தத்திற்காக வேட்டையாடவில்லை என்பதை வனத்துறையினர் உறுதி செய்து, தந்தத்தை யானை உடலில் இருந்து அகற்றினர்

வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களுக்கு யானைகள் அடிக்கடி வருவதால், அவற்றை விவசாயிகள் சத்தம் எழுப்பி விரட்டுவது வழக்கம். ஆனால், வழக்கத்திற்கு மாறாக யாரோ துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது தெரிந்தது. 

இது தொடர்பாக வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொள்ள ஓசூர் வனக்கோட்டம் தலைமையில் வனச்சரக அலுவலர்கள்,ஜவளகிரி தேன்கோட்டை, அஞ்செட்டி மற்றும் களப்பணியாளர்கள் அடங்கிய குழு உடனடியாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது 


நமது செய்தியாளர்:கருமலை தம்பி

Post a Comment

Previous Post Next Post