ஓசூர் அருகே யானையை சுட்டுக்கொன்ற விவசாயியை வனத்துறை கைது செய்தனர்
ஓசூர் அருகே ஜவளகிரி வனப்பகுதியில் ஆண் யானையை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது யானையை சுட்டு கொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது ஜவனகிரி மலைப்பகுதி ஒட்டி உள்ள சென்னம்பாலம் அருகே உள்ள விவசாயி முத்து மல்லேஷ் என்பவர் நாட்டுத் துப்பாக்கியால் யானை சுட்டு கொன்றது தெரியவந்தது இவர் ஏற்கனவே 2020 ஆம் வருடம் பெண் யானையை சுட்டுக் கொண்ட விவகாரத்தில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து அவரை வனத்துறை கைது செய்தனர் தேன் கனிகோட்டை நீதிமன்றத்தை ஆஜர் படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்
நமதுசெய்தியாளர்: கருமலை தம்பி
Tags:
Elephant