பொள்ளாச்சி அடுத்துள்ள சர்க்கார்பதி பகுதியில் காண்டூர் கனல் கால்வாயில் தவறி விழுந்த 2 மாத யானை குட்டி - தண்ணீரில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குட்டி யானையை நீண்ட நேரம் போராடி மீட்டு தாயுடன் சேர்த்த வனத்துறையினர்..
பொள்ளாச்சி அடுத்துள்ள சர்க்கார் பதி பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பக ஆயிரம்கால் பீட் வனப்பகுதி உள்ளது..
இந்த வனப்பகுதி வழியாக பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் உள்ள கான்டூர் கனல் வாய்க்காலில் தண்ணீர் செல்கிறது..
இந்நிலையில் கால்வாயில் செல்லும் தண்ணீரை குடிக்க யானை ஒன்று இரண்டு மாத குட்டியுடன் வந்துள்ளது.
அப்போது தாய் யானை தண்ணீர் குடிப்பதைக் கண்ட குட்டியானை வாய்க்காலில் உள்ள தண்ணீரை குடிக்க முயன்ற போது தவறி வாய்க்காலில் விழுந்துள்ளது..
அப்போது தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட தனது குட்டியை கண்ட தாய் யானையும் வாய்க்காலில் இறங்கி குட்டியை காப்பாற்ற முயன்றுள்ளது..
ஆனால் குட்டியை வாய்க்காலில் இருந்து மேலே ஏற்ற முடியாமல் யானை மிகுந்த சத்தத்துடன் பிலிரி உள்ளது.
அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த வேட்டை தடுப்பு காவலர்கள் குட்டி யானை தண்ணீரில் சிக்கி தவிப்பதை கண்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளனர்..
பின்பு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் பார்த்தபோது குட்டியுடன் தாய் யானை இருப்பதால் குட்டியை வாய்க்காலில் இருந்து மீட்க முடியாமல் இருந்தனர் மேலும் மனிதர்களைக் கண்ட யானை ஆக்ரோஷமாக அவர்களை துரத்தவும் செய்தது..
இதனால் யானை குட்டியை வாய்க்காலில் இருந்து மீட்க முடியாமல் இருந்த நிலையில் ஜேசிபி வாகனம் கொண்டுவரப்பட்டு அதன் உதவியுடன் நீண்ட நேரம் போராடி யானை குட்டியை வாய்க்காலில் இருந்து மீட்டு தாய் யானையுடன் வனத்துறையினர் சேர்த்துள்ளனர்..
பிறந்து இரண்டு மாதமே ஆன யானை குட்டி நீண்ட நேரத்திற்கு பிறகு தாயுடன் சேர்ந்த மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஓடியது..
மேலும் வாய்க்கால் தண்ணீரில் யானை குட்டி நீண்ட நேரம் இருந்த காரணத்தால் சற்று சோர்வு காணப்படுவதால் குட்டி யானையை கண்காணிக்க பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் நான்கு குழுக்கல் அமைக்கப்பட்டு வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து தாய் மற்றும் யானை குட்டியையும் கண்காணித்து வருகின்றனர்.
வாய்க்காலில் தவறி விழுந்து உயிருக்கு போராடி வந்த குட்டியானையை தக்க சமயத்தில் சம்பவ இடத்திற்கு சென்று காப்பாற்றிய வனத்துறை ஊழியர்களுக்கு வனத்துறை அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்..
நமது செய்தியாளர் :சக்திவேல்