Followers

திம்பம் அருகே கரும்பு லாரி ஓட்டுநரை லாரியை சுத்த விட்ட காட்டு யானை

 திம்பம் அருகே கரும்பு லாரி ஓட்டுநரை லாரியை சுத்த விட்ட காட்டு யானை



சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த புலிகள் காப்பகத்தின் வழியாக செல்லும் திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு லாரிகள் சென்று வரும்.

அவ்வாறு செல்லும் கரும்பு லாரி டிரைவர்கள் கரும்பு கட்டுகளை எடுத்து யானைகளுக்காக சாலையோரத்தில் வீசிச்செல்வார்கள். இதனால் கரும்புகளை ருசி பார்த்துவிட்ட யானைகள் நாள்தோறும் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து காட்டுக்குள் இருந்து மலைப்பாதைக்கு வந்துவிடுகின்றன.

இந்தநிலையில் நேற்றைய முன்தினம் மாலை தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று சத்தியமங்கலத்துக்கு புறப்பட்டது. இந்த லாரியானது சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. ஆசனூரை அடுத்து தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே கரும்பு லாரி சென்றபோது காட்டு யானை ஒன்று அங்கு வந்தது. உடனே அந்த யானையானது கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை திடீரென வழிமறித்தபடி நின்றது. யானையை கண்டதும் டிரைவர் அதிர்ச்சி அடைந்து லாரியை அப்படியே நிறுத்தினார்.இதையடுத்து லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கரும்பை யானை துதிக்கையால் பிடுங்கி சுவைக்க தொடங்கியது.இதன்காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஆனால் யானையோ எதையும் கண்டுகொள்ளாமல் கரும்ைப பிடுங்கி தின்பதிலேயே குறியாக இருந்தது. டிரைவர் லாரியை விட்டு இறங்கி சத்தம் எழுப்பியதால் கோபம் கொண்ட காட்டு யானை லாரியில் வந்தவர்களை விரட்ட துவங்கியது இருவர்களும் லாரியை சுத்தியபடியே ஓடிக்கொண்டிருந்தனர் பின்னோக்கி வந்த யானை அவர்களை தொடர்ந்தது லாரி ஒரு சுற்றி வந்த பிறகு மீண்டும் கரும்பு சுவைக்க தொடங்கியது இந்த காட்சி அருகில் நின்று கொண்டிருந்த வாகன ஓட்டி வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் தற்போது வைரலாகி வருகிறது 


நமது செய்தியாளர் முருகானந்தம்

Post a Comment

Previous Post Next Post