இந்தியாவின் நயாகரா என்றும் அழைக்கப்படும் அதிரப்பள்ளி அருவியில் ஆனந்த குளியலில் ஈடுபட்ட யானைகள் கண்ணை கவரும் காட்சிகள்
கேரளாவின் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள இந்த அதிரப்பள்ளி அருவி 24 மீட்டர் விழுகிறது.மழைக்காலத்தில் வழச்சல் மற்றும் சோலையாற்றில் தண்ணீர் பெருக்கெடுக்கும் போது மூன்று அருவிகளும் ஒன்று சேர்ந்து ஒரே அருவியாக பேரருவியாக விழும் தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது இந்த நிலையில் வால்பாறை வனப்பகுதியை விட்டு இடம் பெயர்ந்த காட்டு யானை கூட்டம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெயில் தாக்கத்தை தணித்துக் கொள்ள ஆனந்த குளியலில் ஈடுபட்டது பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டன.
நமது செய்தியாளர் வடிவேல்