படையப்பா என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அரசு பேருந்தை வலி மரித்தது படையப்பா யானை
மூணாறு படையப்பா என்றும் அழைக்கப்படும் படையப்பா என்பது மூணாறில் உள்ள ஒரு காட்டு யானையாகும் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ரஜனியின் படமான படையப்பா திரைப்படத்தின் பெயரை இந்த யானைக்கு பொதுமக்கள் சூட்டினர் யானை வழக்கமான காட்டு யானைகளுக்கு மாறாக மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் நகரங்களுக்கு அடிக்கடி செல்வது மற்றும் அதன் அமைதியான தன்மை ஆகியவை ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. நீண்ட தந்தங்கள் காரணமாக அந்த யானையை எளிதில் கண்டுபிடிக்க முடியும். கொரோனா காலகட்டத்தில் லாக்டவுன் காரணமாக போக்குவரத்து இல்லாத காரணத்தால் படையப்பாவால் பாதிப்பு ஏற்படவில்லை. மீண்டும் போக்குவரத்து துவங்கிய நாளிலிருந்து படையப்பா யானையின் முன்பு செல்பி எடுப்பதும் புகைப்படம் எடுப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது வாகனத்தை கண்டவுடன் இடையூறு செய்ய வந்துள்ளதாக நினைத்து வாகனங்களை மறித்து நின்று விடுகிறது இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மூணாறில் இருந்து திருப்பூருக்கு தமிழக அரசு பேருந்தை சென்று கொண்டிருந்தது ஒன்பதாம் மைலில் அருகே வனப்பகுதியில் இருந்து சாலையை கடக்க வந்த படையப்பா திடீரென வந்த அரசு பேருந்தை பார்த்து நடுச்சாலை நின்றது தொடர்ந்து பேருந்தின் பக்கவாட்டை தன் துதிக்கையால் பின்னோக்கி தள்ளியது சிறிது நேரம் கழித்து வனப்பகுதிக்கு சென்றது இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், யானை வழிமறித்த தமிழக அரசு பேருந்தின் முன்புறம் படையப்பா என ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது. படையப்பா என எழுதப்பட்ட அரசுப் பேருந்தை படையப்பா யானை வழிமறிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
நமது செய்தியாளர் வடிவேல்