அய்யா வழி விடுங்க எங்களுக்கு தாகமா இருக்கிறது தண்ணீர் குடிக்க தான் வந்தோம் வழிவிடுங்க வழிவிடுங்க என்று சொல்வது போல் குட்டியுடன் நின்ற காட்டு யானைகள்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் அதிகமாக யானைகள் காணப்படுகிறது கோடை வெயில் தாக்கத்தால் வனப்பகுதிகளில் வறட்சி நிலவுகிறது இதனால் உணவுகள் தேடியும் தன் உடலில் உள்ள வெப்பத்தையும் தண்ணீர் தாகத்தை தீர்க்கவும் வனப்பகுதியை விட்டு நீர் நிலைகளை நோக்கி படையிருக்கின்றது யானைகள் இந்த நிலையில் இரவு வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் 2 காட்டு யானைகள் வெளியேறின. பின்னர் அவை அருகே உள்ள தலமலை-திம்பம் வனப்பகுதி சாலையில் நடந்து வந்தன. அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து யானை நிற்பதை பார்த்து பேருந்தை நிறுத்தினார் சிறிது நேரம் பேருந்து முன்பாக நின்ற யானைகள் தனது துதிக்கையால் அண்ணா வழி விடுங்க வழிவிடுங்க நாங்க தண்ணி குடிக்க தான் போறோம் என்று சொல்வது போல் துதிக்கையை முன்னும் பின்னும் ஆட்டியவாறு நின்றது தனக்கு வலி கிடைக்காத இடத்தில் நாம் என்ன செய்ய முடியும் என்று உணர்ந்த யானைகள் வந்த வழியை நோக்கி பயணித்தது யானைகள்
இதைப் பற்றி வன ஆர்வலர்கள் தெரிவிக்கையில்
கோடை காலங்களில் வறட்சி நிலவுவதால் நீர்நிலைகளை நோக்கி படையிருக்கிறது வனவிலங்குகள் வனச்சாலையில் பயன்படுத்தும் வாகனங்கள் வன விலங்குகளை இடையூறு செய்யாமல் வாகனங்களை இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்
நமது செய்தியாளர் முருகானந்தம்