Followers

உடுமலை அடுத்துள்ள அமராவதி வனப்பகுதியில் காயமடைந்து நடக்க முடியாமல் இருந்த 9. வயது புலிக்கு வனத்துறையினர் மயக்கூசி செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டனர்..

 உடுமலை அடுத்துள்ள அமராவதி வனப்பகுதியில் காயமடைந்து நடக்க முடியாமல் இருந்த 9. வயது புலிக்கு வனத்துறையினர் மயக்கூசி செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டனர்..



திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள உடுமலை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சம்பட்டி வன பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது புலி ஒன்று உடலில் காயங்களுடன் நடக்க முடியாமல் இருந்ததை கண்டு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.



இதனை அடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் அவர்கள் மருத்துவ குழுவினருடன் சென்று புலியை கண்காணித்து வந்துள்ளனர்.


அப்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு புலியின் இடுப்பு வயிற்றுப் பகுதியில் கயிறு ஒன்று மாட்டி இருந்ததாகவும் அதனால் புலியின் வயிற்றுப் பகுதியில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதால் புலி நடக்க முடியாமல் தவித்து வந்ததையும் வனத்துறையினர் உறுதி செய்தனர்.


பின்பு புலிக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த வனத்துறையினர் ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் தலைமையில் புலிக்கு மயக்க ஊசி செலுத்தி கூண்டில் அடைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு உடலில் சிக்கியிருந்த கயிற்றையும் அகற்றப்பட்டனர்..


பின்பு கூண்டில் வைத்து புலியின் உடல் நிலையை வனத்துறை கண்காணித்து வந்த நிலையில் புலி ஆரோக்கியத்துடன் இருப்பதால் மயக்கம் தெளிந்த உடன் புலியை மீண்டும் கூண்டிலிருந்து வெளியேற்றி வனப்பகுதிக்குள் விடப்பட்டு அப்பகுதியில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.


மேலும் கயிறு அறுக்கப்பட்டு காயம் ஏற்பட்ட இருந்த நிலையில் காயத்தின் தீவிரம் அதனால் ஏதேனும் தொற்று ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்வதற்காக புலியின் உடலில் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டும் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்து வருவதாகவும் கோவை மண்டல தலைமை வன பாதுகாவலரும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனருமான ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்..


நமது செய்தியாளர் சக்திவேல்

Post a Comment

Previous Post Next Post