நீலகிரி மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் ஊருக்குள்ள நுழைந்த காட்டு யானை ஆக்ரோஷமாக காரை தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நிலக்கோட்டை பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளதால் இரவு நேரங்கள் மட்டுமல்லாமல் பகல் நேரங்களிலும் சர்வ சாதாரணமாக காட்டு யானைகள் உலா வரத் தொடங்கியுள்ளன இந்த நிலையில் இன்று காலை நிலக்கோட்டை பகுதியில் திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று ஊருக்குள் உலா வந்தது அப்போது பொதுமக்கள் கூச்சலிட்டதால் கேரள மாநிலம் செல்லும் சாலையில் பிளிரியபடி ஓடியது அப்போது எதிரே வந்த காரை திடீரென ஆக்ரோஷமாக தாக்கியது இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர் யானை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்
நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார்