நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள வாழைத்தோட்டம் பகுதியில் இரவில் உலா வந்த காட்டு யானை கடையை இருந்த உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்ட காட்சி வைரல்
உதகை அருகே உள்ள வாழைத்தோட்டம் பகுதி முதுமலை வனப்பகுதியில் உள்ளது இதனால் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது உலா வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வாழைத்தோட்டம் பகுதியில் உலா வந்த காட்டு யானை கடையின் சட்டரை உடைத்து உணவைத் தேடியது .
பின்பு கடையிலிருந்து பொருட்களை தும்பிக்கையால் எடுத்து சாப்பிட்டது.
உடனடியாக முதுமலை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த வனத்துறையினர் ரோந்து வாகனத்தை வைத்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மேலும் யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் வனத்துறையினர்
நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார்