Followers

கேரள மாநிலம் குருவாயூர் புன்னத்தூர் யானை கோட்டையில் உள்ள 26 யானைகளுக்கு சுக நல வாழ்வு சிகிச்சை தொடங்கியது.

 கேரள மாநிலம் குருவாயூர் புன்னத்தூர் யானை கோட்டையில் உள்ள 26 யானைகளுக்கு சுக நல வாழ்வு சிகிச்சை தொடங்கியது.




கேரள மாநிலம் திருச்சூர் குருவாயூர்  புன்னத்தூர் யானைக்கோட்டையில் உள்ள 38 யானைகளுக்கு வருடம் தோறும் ஜூலை மாதம் சுக நல வாழ்வு சிகிச்சை தொடங்குவது என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த  யானைக்கோட்டையில் உள்ள 26 யானைகளுக்கு சுக நல வாழ்வு சிகிச்சை தற்போது தொடங்கியுள்ளது . மீதமுள்ள 12 யானைகளுக்கு மதப்பாடு முடிந்ததும் சிகிச்சை துவங்க உள்ளது.



யானைகளின் ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சிக்காக அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட மற்றும் சமச்சீர் உணவுகளை அளிப்பது முக்கிய அம்சமாகும். புத்துணர்ச்சி சிகிச்சை முறைக்கு  குறிப்பிட்ட நிலைகள் உள்ளன. சிகிச்சை தொடங்கும் முன், யானைகளின் ரத்தம் மாதிரி சேகரிக்கப்பட்டு அறிவியல் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். யானைகளின் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடு கவனமாக கண்காணிக்கப்படும். சிகிச்சைக்கு முன், புழுக்களை ஒழிப்பதற்கான மருந்துகள் வழங்கப்படும்.


சிகிச்சைக்கு சிறப்பு ஆயுர்வேத முறையும் பின்பற்றப்படும். யானைகளின் ஆரோக்கிய நிலை மற்றும் உடலியல் ஆகியவற்றைப் புரிந்து கொண்டு சிகிச்சை முறை நிர்ணயிக்கப்படும். சிகிச்சையின் ஒரு பகுதியாக நீண்ட நேரம்  குளியல், மருந்து வகைகள் அடங்கிய உணவு முறை மற்றும் உடற்பயிற்சியும் அளிக்கப்படும். ஒவ்வொரு யானையின் குணாதிசயங்களையும் புரிந்து கொண்ட பிறகு ஒரு நிபுணர் குழு உணவு முறையை முடிவு செய்யும்

குருவாயூர் தேவசம் சார்பில் நடத்தி வரும் இந்த யானைகள் நல சிகிச்சைத் திட்டம், அறிவியல் பூர்வமாக ‘திட்டமிடப்பட்ட’ யானைகளின் ஆரோக்கிய நிலையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக யானை சிகிச்சை நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இந்த சிகிச்சை முகாம் முடிந்த பிறகு யானைகளின் உடல் அளவில்  மாற்றங்கள் ஏற்படும். 250 முதல் 300 கிலோ வரை எடை அதிகரிக்கும். யானைகள் நலத்துறையில்  குருவாயூர் தேவஸ்வம் நடத்தி வரும் இந்த புத்துணர்ச்சி  சிகிச்சை முகாம்  முன் மாதிரியாக இடம் பெற்றுள்ளன

3960 கிலோ அரிசி, 1320 கிலோ பருப்பு/முத்திரை, 1320 கிலோ ராகி, 132 கிலோ அஷ்ட சூர்ணம், 330 கிலோ சியவனப்ராசம், 132 கிலோ மஞ்சள் தூள், இரும்பு சத்து டானிக், மற்றும் பல்வேறு விட்டமின் போன்றவை இந்த சிகிச்சைக்கு பயன்படுத்துகின்றன. குருவாயூர் தேவசம் சார்பில் நேற்று தொடங்கப்பட்ட இந்த முகாம் ஒரு மாத காலம் வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது


நமது செய்தியாளர் திருச்சூரிலிருந்து ஹனீஸ்

Post a Comment

Previous Post Next Post