மீண்டும் வால்பாறை சாலக்குடி சாலையில் கபாலி மூன்று மணி நேரம் போக்குவது பாதிப்பு யானையை வனப்பகுதிக்குள் அனுப்பும் பணியில் வனத்துறையினர்
வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடிக்கு வனப்பகுதி வழியாக சாலை செல்கிறது. இங்கு மளுக்கப்பாறை அருகே கடந்த சில நாட்களாக கபாலி என்கின்ற ஒற்றை காட்டுயானை உலா வருகிறது. இன் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கபாலி யானை, அந்த வழியாக சென்ற லாரி பஸ் சுற்றுலா வாகனங்களை சாலையில் மரித்தது இதனால் 3மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அங்கிருந்து வாகன ஓட்டிகள் சத்தம் எழுப்பியதால் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது இதைப் பற்றி உடனடியாக சாலக்குடி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தவிர அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் வனத்துறையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நமது செய்தியாளர் திருச்சூர் மணிகண்டன்