தமிழக கேரளா ஒட்டி உள்ள மூணாறில் புலி நடமாட்டம் தென்பட்டதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் புலியின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது,கடந்த தினம் விரிபாரா பகுதியில் லட்சுமி எஸ்டேட் வசிக்கும் ஆனந்தன் என்பவர் குடும்பத்தினர் எஸ்டேட் சாலையில் நடந்து சென்ற பொழுது புலி ஒன்று தேயிலை தோட்டத்தில் பதுங்கி நடந்து சென்றது. புலியை பார்த்தவுடன் புகைப்படம் எடுப்பதற்காக கைப்பேசி எடுக்கும் பொழுது புலி ஓடியது. இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வளையங்களில் பதிவிட்டுள்ளனர் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது இதனை அடுத்து மூணார் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர் மேலும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்துள்ளனர் வனத்துறையினர்
நமது செய்தியாளர் மூணார் சந்திரசேகர்